தென்காசி மாவட்டம் கடையம் ராமநதி அணைப் பகுதியில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் ராமநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் குளித்துள்ளனர்.
இதுகுறித்த வீடியோ வெளியான நிலையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.