நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 14 சென்டி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகை, அவலாஞ்சி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 14 புள்ளி 3 சென்டிமீட்டர் மழையும், பந்தலூரில் 8 புள்ளி 2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. மேலும், கடும் குளிர் நிலவுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.