பழைய ஓய்வூதிய திட்டம், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சங்கத்தின் சார்பில் பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியராக பணியாற்றிப் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா தேனியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பேட்ரிக், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் காலி பணியிடங்களை உடனடியாக தமிழக அரசு நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.