முதலமைச்சர் வருகையையொட்டி, கல்லணை – திருவையாறு இடையே அவசர கதியில் தரமற்ற முறையில் சாலை அமைக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து திருவையாறு செல்லும் சாலை மிகவும் மோசமாக இருப்பதாகப் பொதுமக்கள் நீண்ட நாட்களாகப் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், கல்லணையில் இருந்து தண்ணீரைத் திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வருவதையொட்டி, அவசர கதியில் சாலை அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சாலை தரமற்ற முறையில் மிகவும் மோகமாக அமைக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பொறுப்பற்ற அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.