ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பாமக நிர்வாகி கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரும் பாமகவில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவராகவும் பொறுப்பு வகித்த சக்கரவர்த்தி என்பவர் நேற்று முன்தினம், வீட்டிற்குச் செல்லும் சாலை அருகே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரபு என்ற இளைஞரை சோளிங்கர் காவல் ஆய்வாளர் தலைமையிலான குழு பிடிக்க முயன்ற போது அவர் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
இதனையடுத்து பிரபுவை இடது முட்டிப் பகுதியில் சுட்டுப்பிடித்த போலீசார், அவரை வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பாமக நிர்வாகி கொலை வழக்கு தொடர்பாகப் பிரபுவிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.