இஸ்ரேல் - ஈரான் இடையே 4வது நாளாக தொடரும் போர்!
Sep 17, 2025, 10:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இஸ்ரேல் – ஈரான் இடையே 4வது நாளாக தொடரும் போர்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மாளிகை மீது தாக்குதல்!

Web Desk by Web Desk
Jun 16, 2025, 07:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் – ஈரான் இடையிலான தொடர் மோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவுகிறது.

ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருவதால் இருநாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது.

4வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த மோதல் காரணமாக ஈரானில் 224 பேர் கொல்லப்பட்டதாகவும் ஆயிரத்து 481 பேர் காயம் அடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், இஸ்ரேலில் 13 பேர் உயிரிழந்ததாகவும் 380 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இஸ்ரேலின் ஹைஃபா நகரம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் ஹைஃபாவின் எண்ணெய் குழாய்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் பசான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள எண்ணெய் குழாய்கள் சேதம் அடைந்தன.

சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மாளிகையைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.. இதில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை..

தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் ஈரானின் IRGC எனப்படும் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையின் உளவுத் துறைத் தலைவர் முகமது கசெமி உயிரிழந்தார். அதேபோல் துணை ஜெனரல் ஹசனும் கொல்லப்பட்டதாக நெதன்யாகு அறிவித்துள்ளார்.

மேலும், ஈரானின் மஷாத் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தி எரிபொருள் நிரப்பும் விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே இஸ்ரேலுக்குள் ஊடுருவிய 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தடுத்து அழித்ததாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.

Tags: The war between Israel and Iran continues for the 4th dayAttack on Israeli Prime Minister Netanyahu's residence
ShareTweetSendShare
Previous Post

நகரமா? நரகமா? : உயிர்பலி வாங்கும் பள்ளங்கள் – அச்சத்தில் மக்கள்!

Next Post

ஈரானின் உச்ச தலைவரை கொலை செய்ய திட்டமிட்ட இஸ்ரேல் : தடுத்து நிறுத்திய டிரம்ப்!

Related News

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies