ஈரான்- இஸ்ரேல் நாடுகள் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும் என்றும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் போப்பாண்டவர் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சனை குறித்துப் பேசிய அவர், ஈரான் மற்றும் இஸ்ரேலின் நிலைமை மோசமடைந்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார். நீதி, சகோதரத்துவம் மற்றும் பொது நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நீடித்த அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அணுசக்தி அச்சுறுத்தல்கள் இல்லாத பாதுகாப்பான உலகத்தை எழுப்புவதற்கான உறுதிப்பாட்டைப் பரஸ்பர மரியாதை மற்றும் நேர்மையான உரையாடல் மூலம் தொடர வேண்டும் என்றும் போப் ஆண்டவர் வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே ஈரான் – இஸ்ரேல் மோதலில் மத்தியஸ்தம் செய்வதில் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று ரஷ்ய அதிபர் புதினின் முதலீட்டு தூதர் கிரில் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார்.