திருத்தணி சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் கைதான கூடுதல் டிஜிபி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக நாளைய தினம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரனைக் கூலிப்படை மூலம் கடத்திய விவகாரத்தில் கூடுதல் டிஜிபி ஜெயராமை கைது செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கூடுதல் டிஜிபி ஜெயராம் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜெயராமன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஜெயராம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அடுத்து, நாளைய தினம் வழக்கு பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் ஒப்புதல் அளித்தனர்.