கள்ளக்குறிச்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொள்ளையடிக்க முயன்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய கடைவீதியில் தனியார் வங்கியின் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் இயந்திரம் நீண்ட நேரமாக வேலை செய்யவில்லை என வாடிக்கையாளர்கள் புகாரளித்தனர்.
அதன்பேரில் வங்கி மேலாளர் நேரில் வந்து பார்த்தபோது, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து சிலர் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.
ஆனால், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இதனால் ஏடிஎம்மில் இருந்த 15 லட்சம் ரூபாய் பணம் தப்பியது.