கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஜெபக்கூடம் கட்ட அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பேரூராட்சித் தலைவர் புஷ்பலதா, பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் ஆகியோர் தலைமையில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்று வந்தது.
இக்கூட்டத்தில் மருதம் நகர் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஜெபக்கூடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கத் தீர்மானம் நிறைவேற்றப் போவதாகத் தகவல் வெளியானது.
குடியிருப்புகளுக்கு மத்தியில் ஜெபக்கூடம் கட்ட பல ஆண்டுகளாக ஆட்சேபனை தெரிவித்து வரும் நிலையில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப் போவதாக வந்த தகவலால் அப்பகுதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஜெபக்கூடம் கட்டுவதற்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும், பாஜகவினரும் கண்ணம்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.