மதுரை முருக பக்தர்கள் மாநாடு குறித்த பாடலை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்.
மதுரை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் வரும் 22-ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, முருக பக்தர்கள் மாநாடு தொடர்பான பாடலை மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்.
அப்போது, தமிழிசை சௌந்தரராஜன், சுதாகர் ரெட்டி, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.