திபெத்திய பௌத்த மத தலைவரான 14-வது தலாய்லாமாவின் பிறந்த நாளை கருணை தினமாக கொண்டாட அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தலாய்லாமாவின் பிறந்தநாள் ஜூலை 6-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், ஆளும் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி எம்.பி-க்கள் கட்சி பாகுபாடின்றி இந்த தீர்மானத்தை முன்மொழிந்தனர். இரு அவைகளிலும் இந்த தீர்மானம் நிறைவேறும் பட்சத்தில் அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்கு இந்த தீர்மானம் அனுப்பப்படும். ட்ரம்ப் ஒப்புதல் வழங்கினால், ஜூலை 6-ம் தேதி அமெரிக்காவில் கருணை தினமாக கடைபிடிக்கப்படும்.