மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் - நயினார் நாகேந்திரன்
Mar 15, 2026, 03:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 20, 2025, 07:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது என அமைச்சர் சேகர்பாபுவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி பெருகி வரும் நிலையில்  உத்திர பிரதேச முதல்வர் மற்றும்  ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேள்வி எழுப்பியுள்ள இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகரபாபுவுக்கு பதிலளிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

பார் முழுவதும் அருள்பாளிக்கும் கடவுள் முருகப்பெருமான். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆறுமுகனின் பக்தர்கள் உலகெங்குமுள்ள மூலை முடுக்கெல்லாம் இருப்பர். ஆக, ஜூன் 22-ஆம் தேதி நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பக்தர்கள் யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதிலிருந்தும் யார் வேண்டுமானாலும் வரலாம். பழனியில் நடத்தப்பட்ட முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு ஜப்பானில் இருந்து சிலர் கலந்து கொண்டதாக திமுக அரசால் பெருமை பேசப்பட்ட நிலையில், மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு உத்தர பிரதேச முதல்வரும், ஆந்திர துணை முதல்வரும் வரக் கூடாது என்பது முறையா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மையில், மாநாட்டிற்கு ஆந்திர துணை முதல்வர் வரக் கூடாது என்பது அமைச்சரின் நிலைப்பாடா? அல்லது, ஆந்திரா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பக்தி மிக்கவர்கள், யாருமே தமிழகத்திற்கு வரக்கூடாது என்று சொல்கிறாரா எனும் சந்தேகம் எழுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசியலைத் தாண்டி ஆன்மிக ரீதியாக நடத்தப்படும் மாநாட்டில் கூட மாநில அடிப்படையில் பிளவுவாதத்தை தூண்டுவது தவறு. எனவே, பக்திக்கு எந்தவொரு எல்லையும் இல்லை என்பதை உணர்ந்து, மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: Uttar Pradesh Chief MinisterTamil Nadu BJP state president Nainar NagendranMadurai Muruga devotees' conference.Madurai Muruga devoteesarupadai veeduhindu munaniyogiAndhra Pradesh Deputy Chief Minister Pawan KalyanLord Muruga.
ShareTweetSendShare
Previous Post

செல்பி கேட்ட தம்பதி – விபூதியை அழித்துவிட்டு எடுத்துக்கொண்ட திருமாவளவன்!

Next Post

விபூதியை அழித்த திருமா – போலி கபடதாரிகளின் வேஷம் அம்பலமானதாக எல்.முருகன் விமர்சனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies