சேலம் உருக்காலையில் உற்பத்தி செய்யப்படும் புதிய வகைப் பொருட்களை மத்திய அமைச்சர் குமாரசாமி நேரில் பார்வையிட்டார்.
உருக்காலை வருகைதந்த அவருக்கு உருக்காலை நிர்வாக இயக்குனர் பிரபீர் குமார் சர்க்கார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து உருக்காலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஆய்வு செய்த மத்திய அமைச்சர், சந்தைக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள பிரஷர் குக்கர், துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகள் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து உருக்காலை செயல்படும் விதம் குறித்து மத்திய அமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.