ஈரானின் அதிரடி தாக்குதலால் இஸ்ரேல் அரசுக்கும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவிற்கும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் 10வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், டெல் அவிவ், ஜெருசலேம், ரமாத் கன், ஹைபா, பெஹர் ஷபா உள்ளிட்ட இஸ்ரேல் நகரங்களின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலின் அயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவி ஈரான் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதால் மொசாட் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களும் சேதமடைந்துள்ளன.
மருத்துவமனைகள், குடியிருப்புகள் மீது ஈரான் குறிவைத்து நடத்திய தாக்குதலால் உயிரிழப்புகள் அதிகரிப்பதால் பெஞ்சமின் நெதன்யாஹூ அரசு தேவையற்ற போரைத் தொடர்வதாக இஸ்ரேலிய மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலின் Beersheba நகரில் உள்ள மைக்ரோசாப்ட் அலுவலகம், முக்கிய மருத்துவமனைகள் மீதான ஈரான் தாக்குதலால் நெதன்யாஹூவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ராணுவ ஆதரவு தாமதம் ஆவதால், இஸ்ரேல் ராணுவம் தனித்தே ஈரானை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கும் தள்ளப்பட்டுள்ளது.
மேலும் ஈரானின் அதிரடி தாக்குதலால் இஸ்ரேல் அரசுக்கும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவிற்கும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.