மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது மற்றொரு தரப்பினர் டாஸ்மாக் கடை வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி அருகே எரவார்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையைத் திறக்கக் கூடாது எனக் கூறி பெண்கள் மற்றும் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கடை முன்பு கூடிய சிலர் டாஸ்மாக் கடை கண்டிப்பாக வேண்டும் எனப் போராட்டம் நடத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.