இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக கைபர் என்ற ஏவுகணையை அந்நாட்டின் மீது ஈரான் ஏவியுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையே போர் சூழல் நீடித்து வரும் நிலையில் ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையங்கள் மீது அமெரிக்கா தனது தாக்குதலை நடத்தியது.
மேலும் ஈரானை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணையை இஸ்ரேல் அனுப்பியது இதற்குப் பதிலடி தரும் விதமாக கைபர் என பெயரிடப்பட்ட ஏவுகணையை ஈரான் தனது எல்லையில் இருந்து ஏவி உள்ளது.
இதனையறிந்த இஸ்ரேல் சைரன் ஒலிக்கும் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.