தென்காசி மாவட்டம் கடையம் அருகே பக்கெட் பிரியாணி சாப்பிட்ட குழந்தைகள் உட்பட 9 பேருக்கு வாந்தி உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடையம் அருகே உள்ள கட்டளையூரை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன்கள் அழகு ராஜன், கண்ணன் ஆகியோர் பாவூர்சத்திரம் பகுதியிலுள்ள பிரபல தனியார் பிரியாணி கடையில் இருந்து பக்கெட் பிரியாணி வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டுள்ளனர்.
சிறிது நேரத்தில் அவர்களுக்குக் கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் குழந்தைகள் உட்பட 9 பேர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















