சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உணவக மேற்கூரை சரிந்து விழுந்ததில் வாடிக்கையாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மேட்டூர் அருகே உள்ள ராமன் நகரில் கனமழை காரணமாகச் சூறைக்காற்று வீசியது. அப்போது உணவகத்தின் மேற்கூரை சரிந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதில் கடை முன் நின்றிருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.