ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை அருகே பத்திரப்பதிவு துறையின் ஆவணங்கள் சாலை ஓரம் வீசப்பட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மல்லல் செல்லும் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் சாலை ஓரமாக கிடந்த சில ஆவணங்களைக் கண்டனர். அதனை எடுத்துப் பார்த்த போது அவை பத்திரப்பதிவு துறையில் பயன்படுத்தப்படும் சிடிக்கள் என்பது தெரியவந்தது.
தமிழக அரசின் முத்திரையுடன் இருந்த சிடிக்கள் குறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
















