போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7 வரை நீதிமன்ற காவல்!
Mar 15, 2026, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7 வரை நீதிமன்ற காவல்!

Murugesan M by Murugesan M
Jun 24, 2025, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாரில் நடைபெற்ற மோதல்  தொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பிரசாத்துக்குப் போதைப்பொருள் வினியோகம் செய்ததாக பிரதீப் குமார், ஜான் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், 11 கிராம் கொக்கைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவர்களிடம் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் பிரசாத் மூலமாகப் போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஸ்ரீகாந்தை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு நுண்ணறிவு போலீசார், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது, பரிசோதனையில் நிரூபணமானது. இதையடுத்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்பு முன்னிறுத்தப்பட்ட ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

அவரது வழக்கறிஞரின் கோரிக்கையை நீதிபதி ஏற்றதால், முதல் வகுப்பு சிறையில் ஸ்ரீகாந்த் அடைக்கப்பட்டார்.

Tags: Actor Srikanth remanded in judicial custody till July 7 in drug caseநடிகர் ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டார்.
ShareTweetSendShare
Previous Post

விருதுநகர் : 40-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய்!

Next Post

கர்ப்பிணி உள்ளிட்ட மூன்று பெண்கள் மீது காவலர் கொடூர தாக்குதல் : நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies