கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்!
Mar 15, 2026, 08:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்!

Murugesan M by Murugesan M
Jun 24, 2025, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

ஈரானின் அணு ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் தேதி திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ‘மிட்நைட் ஹாமர்’ என்று பெயரில் ஈரான் மீது நேரடியாகத் தாக்குதல் நடத்தியது.

அந்த நாட்டின் போர்டோ, நட்டான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்திருந்தது. அதன்படி, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.

கத்தாரில் உள்ள மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க ராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளம்,  சென்ட்காம் தலைமையகம் ஆகிய அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து 10க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைச் சரமாரியாக வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.

கத்தாரில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தலைநகர் தோஹாவிலும் குண்டு சத்தம் கேட்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரானின் இந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள கத்தார் அரசு, ஈரானின் 7 ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக விளக்கமளித்தது. ஈரானின் தாக்குதலால் கத்தார், பஹ்ரைன், எகிப்து, குவைத், ஈராக், சவுதி அரேபியா, லெபனான், ஜோர்டான், ஓமன் உள்ளிட்ட நாடுகள் தங்களது வான்வெளியை மூடின. அண்டை நாடான பக்ரைனில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Tags: ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்Iran fires missiles at US military bases in Qatar
ShareTweetSendShare
Previous Post

போர் நிறுத்தம் அமெரிக்க அறிவிப்பு – ஈரான் மறுப்பு!

Next Post

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான கொள்கையை இந்தியா உலகிற்குத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது : பிரதமர் மோடி

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies