விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் படத்திற்குத் தணிக்கை குழு U சான்றிதழ் வழங்கியுள்ளது.
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும், சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக லவ் மேரேஜ் உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்திற்குத் தணிக்கை குழு U சான்றிதழை வழங்கியுள்ளது.
















