ஆப்பிரிக்காவின் ‘புதிய நம்பிக்கை’?
Aug 12, 2025, 06:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஆப்பிரிக்காவின் ‘புதிய நம்பிக்கை’?

Web Desk by Web Desk
Jun 26, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்பிரிக்காவின் புதிய நம்பிக்கையாக உருவாகியிருக்கும் BURKINA FASO நாட்டின் அதிபர் இப்ராஹிம் பற்றிய சிறப்புத் தொகுப்பை பார்க்கலாம்.

ஆப்ரிக்கா… அதிக வளங்களைக் கொண்ட கண்டம்… ஆனால் பெரும்பாலான ஆப்ரிக்க நாடுகள் ஏழ்மை நிலையில் வாடுகின்றன. தங்கம், வைரம் மட்டுமல்லாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்களில் உள்ள கோபால்ட், லித்தியம் உள்ளிட்ட பல கனிமங்கள் ஆப்ரிக்காவில் இருந்து அதிகமாக கிடைக்கின்றன.

அப்படியென்றால் ஆப்ரிக்க மக்கள் பெரும் செல்வந்தர்களாக இருக்க வேண்டுமல்லவா?அவர்கள் ஏன் வறுமையில் வாடுகிறார்கள்? எதற்காக ஏழை நாடுகளின் பட்டியலில் இருக்கிறார்கள்? ஆப்ரிக்க நாடுகளும் அதன் மக்களும் பிற தேசங்களால் சுரண்டப்படுகிறார்கள் என்பதே இந்த கேள்விகளுக்கான பதில்.

மகிழ்ச்சி, வளர்ச்சி, வேலைவாய்ப்பு என எந்தப் பட்டியலை எடுத்தாலும் ஆப்ரிக்க நாடுகள் பின்தங்கியிருப்பதைக் காண முடியும். ஆப்ரிக்க சுரங்கங்களில் இருந்து கிடைக்கும் வருவாயில் 90 விழுக்காடு வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை அதுதான்.

ஏதோ கொஞ்சம் வளர்ந்த ஆப்ரிக்க நாடுகளில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்புப் பணிகளைக்கூட வெளிநாட்டு நிறுவனங்கள்தான் செய்கின்றன. இதில் கொடுமை என்னவென்றால் தங்கள் ஊரில் செயல்படுத்தப்படும் திட்டங்களில்கூட ஆப்ரிக்க மக்களுக்கு வேலை கிடைப்பதில்லை.

காலனி ஆதிக்கத்தின் போது ஆப்ரிக்காவின் வளங்கள் உறிஞ்சி எடுக்கப்பட்டன. தற்காலத்தில் அது NEO – COLONIALISM-ஆக மாறியிருக்கிறது. பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாக ஆப்ரிக்காவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன மேற்குலக நாடுகள். பிரான்ஸின் காலனி ஆதிக்கத்தின்கீழ் இருந்த 14 தேசங்கள் இன்றும் அந்நாட்டுக்கு வரி செலுத்தி வருகின்றன.

மேலும் அவை CFA FRANC என்ற நாணயத்தையும் பயன்படுத்துகின்றன. இந்த தேசங்கள் ஐரோப்பாவுக்கு வெளியே வர்த்தகம் செய்வது எளிய காரியமல்ல. பொருளாதார நிலைக்கு ஏற்றபடி வட்டி விகிதங்களை மாற்றவோ, நாணயத்தின் மதிப்பை மாற்றவோ முடியாது. மேற்கு ஆப்ரிக்க நாடுகளுக்காக BCEAO மற்றும் மத்திய ஆப்ரிக்க தேசங்களுக்காக CEMAC என இரண்டு வங்கிகளை பிரான்ஸ் நடத்துகிறது.

இந்த நாடுகள் தங்கள் அந்நியச் செலாவணி கையிருப்பில் 50 விழுக்காட்டை பிரான்ஸ் கருவூலத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். அதனால் அந்த பணத்தை உள்நாட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது.

2019-ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தத் தொகை இதைவிட அதிகமாக இருந்தது. இப்படி மறைமுகமாகப் பிற தேசங்களின் நாணயக் கொள்கையை பிரான்ஸ் கட்டுப்படுத்துவது, அந்நாடுகளின் இறையாண்மையைத் திருடும் செயல் என்கிறார்கள் புவிசார் அரசியல் வல்லுநர்கள். இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்திருக்கும் தலைவர்தான் IBRAHIM TRAORE. ஆப்ரிக்காவுக்குத் தேவை உண்மையான சுதந்திரம் முழக்கமிடும் அவர், BURKINA FASO என்ற நாட்டின் தலைவர்.

1988-ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி BONDOKUY பகுதியில் உள்ள KERA என்ற இடத்தில் பிறந்தார் இப்ராஹிம். கல்லூரியில் புவியியல் படித்த அவர், மாணவர் அமைப்புகளில் ஆர்வமாக இயங்கி வந்தார். இஸ்லாமிய மாணவர் சங்கத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கிய இப்ராஹிம், BURKINA FASO-ன் மார்க்சிஸ்ட் தேசிய மாணவர் சங்கத்தின் பிரதிநிதியாக உயர்ந்தார்.

2009-ஆம் ஆண்டு BURKINA FASO ராணுவத்தில் இணைந்த அவருக்கு 2014-ல் லெப்டினண்ட் பதவி வழங்கப்பட்டது. பின்னர் அமைதிக்கான ஐ.நா. படையில் இணைந்து பணியாற்றினார். அப்போது மாலியில் ஜிகாதி குழுக்கள் நடத்திய விமானத் தாக்குதலைத் துணிச்சலாக எதிர்கொண்டதற்காக பாராட்டப்பட்டார். பின்னர் BURKINA FASO-க்கு திரும்பிய இப்ராஹிம், அங்கு அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த ஜிகாதி குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 2020-ஆம் ஆண்டு கேப்டன் பதவிக்கு வந்த இப்ராஹிம், 2022-ல் அரசுக்கு எதிரான ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளை ஆதரித்தார்.

7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆயுத தாக்குதல்களை அரசால் தடுக்க முடியவில்லை என்பதே அதற்குக் காரணம். ஆப்ரிக்க நாடுகளிலேயே அதிக ஆட்சிக் கவிழ்ப்புகளைச் சந்தித்த நாடு BURKINA FASO-தான். அல்கொய்தா, ISIS உள்ளிட்ட அமைப்புகள் தாக்குதல் நடத்தியபோது கயாவில் பீரங்கி படை ஒன்றை வழிநடத்தினார் இப்ராஹிம். 2022-ஆம் ஆண்டு பயங்கரவாதிகளின் தாக்குதல் உச்சத்தைத் தொட்டபோது அப்போதைய ஆட்சியாளர்களை ராணுவம் எதிர்க்கத் தொடங்கியது. 2022-ஆம் ஆண்டு ஆட்சியைக் கவிழ்த்து BURKINA FASO-ன் அதிபரானார் IBRAHIM TRAORE.

ஆண்டுக்கணக்கில் நடைபெற்ற சண்டைகளால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்த நேரத்தில்தான் ஆட்சிக்கு வந்தார் இப்ராஹிம். மேலும் மேற்குல நாடுகள் அவருக்கு எதிராக இருந்தன. BURKINA FASO-ன் பெரும்பாலான மக்கள் பட்டினியில் வாடுவதாக ஐ.நா.வின் அறிக்கை கூறியது.

சில இடங்களில் பெண்களும் குழந்தைகளும் உணவின்றி இலைகளையும் உப்பையும் உண்பதாக அந்த அறிக்கை சொன்னது. இப்படியோர் அசாதாரண சூழ்நிலையில் ஆட்சிக்கு வந்த இப்ராஹிம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்தார்.

அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார ரீதியாக மேற்குலக நாடுகளை எதிர்க்கத் தொடங்கினார் இப்ராஹிம். கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் முகாமிட்டிருந்த FRENCH படைகளை BURKINA FASO-ல் இருந்து வெளியேற்றினார்.

மேற்குலக நாடுகளின் எதிரியாகக் கருதப்படும் ரஷ்யாவுடன் கைகோர்த்தார். இப்ராஹிம் தலைமையிலான அரசையும் BURKINA FASO-ன் மக்களையும் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து காக்கும் வேலையில் ஆப்ரிக்க ராணுவத்துடன் ரஷ்ய வீரர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். உக்ரைன் போருக்கு நடுவிலும் இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறது ரஷ்யா.

“ஏகாதிபத்தியவாதிகளால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகளாக இருக்காதீர்கள்” என ஆப்ரிக்க தலைவர்களை விமர்சித்தபோதுதான் உலகத்தின் பார்வை இப்ராஹிமை நோக்கி திரும்பியது. ஆப்ரிக்கா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் காலனித்துவம் மற்றும் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இப்ராஹிமின் உரை எழுச்சியை ஏற்படுத்தியது.

பொருளாதார ரீதியாக BURKINA FASO-வை முன்னேற்றும் வகையில் அரசு சார்பில் சுரங்க நிறுவனங்களை உருவாக்கினார் இப்ராஹிம். ஆப்ரிக்க வளங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மண்ணின் மைந்தர்களுக்கே செல்ல வேண்டும் என்பதுதான் இப்ராஹிமின் கொள்கை.

வெளிநாட்டு நிறுவனங்கள் BURKINA FASO-வில் திட்டங்களைச் செயல்படுத்த விரும்பினால் அரசுக்கு 15 விழுக்காடு பங்குகளை வழங்க வேண்டும் என்ற விதியை நடைமுறைப்படுத்தினார். நட்பு நாடான ரஷ்யாவுக்கும் இதுபொருந்தும்.

BURKINA FASO-வில் ஆய்வு செய்வதற்காக மேற்குலக நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமத்தை ரத்து செய்த இப்ராஹிம், அந்நிய தேசங்களுக்குச் சொந்தமான தங்கச் சுரங்கங்களை நாட்டுடைமை ஆக்கினார்.

அதற்குரிய பணத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுத்தபிறகே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போரால் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் BURKINA FASO-ன் பொருளாதாரத்தை உயர்த்தியிருக்கிறார் இப்ராஹிம். உள்நாட்டு வருவாயை அதிகரிப்பதிலும் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதியை உயர்த்துவதிலும் பாராட்டத்தக்க முன்னேற்றத்தை இப்ராஹிம் தலைமையிலான அரசு அடைந்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது. இதேபோல் உலக வங்கியின் பாராட்டையும் இப்ராஹிம் பெற்றுள்ளார்.

காலனித்துவ அடையாளங்களை முற்றிலுமாக வெறுக்கும் அவர், FRENCH கலாச்சாரப்படி நீதிபதிகள் வெள்ளை WIG அணிவதற்கு தடை விதித்தார். BURKINA FASO-வில் இப்ராஹிம் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை மாலி, நைஜர் ஆகிய நட்பு நாடுகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. தமது எல்லைக்குள் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை 2024-ஆம் ஆண்டில் நைஜர் ரத்து செய்தது.

கறுப்பின மக்களை விலங்குகளைப் போல் கருதும் ஊழல் கறைபடிந்த அரசியல்வாதிகள் மேற்குலக நாடுகளுக்கு சேவையாற்றியதன் விளைவாக ஆப்ரிக்க நாடுகள் மீண்டும் மீண்டும் பாதாளத்தில் விழுவதாகக் கூறும் அரசியல் நோக்கர்கள், ஆப்ரிக்கா முழுமையாக விடுதலை பெற வேண்டும் என்ற எழுச்சியை இப்ராஹிம் ஏற்படுத்தியுள்ளதாக புகழாரம் சூட்டுகின்றனர்.

“இயற்கை வளம் நிறைந்த ஆப்ரிக்க கண்டத்தின் மக்கள் ஏன் ஏழைகளாக இருக்கிறார்கள்” என்ற கேள்வியை உரக்க எழுப்புகிறார் இப்ராஹிம். எப்போதுமே ஒரு தலைவரை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆப்ரிக்க மக்கள், இப்ராஹிமை அந்த இடத்தில் வைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். ஆப்ரிக்கா முழுவதும் இப்ராஹிமின் செல்வாக்கு ஆலமரம் போல கிளை பரப்பிவருகிறது.

இப்ராஹிமைக் கொல்ல 19 முறை முயற்சிகள் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் எப்போதும் கை துப்பாக்கியுடன் பாதுகாவலர்களுக்கு மத்தியிலேயே வலம் வருகிறார் இப்ராஹிம். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்கும்போது அவர்களுடன் கைகுலுக்கமாட்டார். அதற்குப் பதிலாக அவர் என்ன செய்கிறார் என்பதைப் பாருங்கள்.

GHANA நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ராணுவ சீருடை அணிந்து கைத்துப்பாக்கியுடன் இப்ராஹிம் வந்தபோது அரங்கம் அதிர்ந்தது.
BURKINA FASO-வின் மக்கள்தொகையில் இளைஞர்கள் அதிகமிருப்பதே இப்ராஹிம் பிரபலமாகக் காரணம் என்கிறார்கள் மேற்கத்திய அரசியல் பார்வையாளர்கள். சமூக வலைத்தளங்களில் வைரலான தலைவராக உள்ளார் இப்ராஹிம். அவரைப் புகழ்ந்து பிரபல கலைஞர்கள் பாடுவது போன்ற ஏ.ஐ. வீடியோக்கள் SOCIAL MEDIA மூலம் பரப்பப்படுகின்றன.

ரஷ்ய ஊடகங்களும் இப்ராஹிமின் உரைகளை அதிகம் ஒளிபரப்புகின்றன. BURKINA FASO-வில் உள்ள தங்கச் சுரங்கங்களைக் கைப்பற்றுவதற்காகவே அந்நாட்டுக்கு ரஷ்யா உதவி செய்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. சீனா மற்றும் ரஷ்யாவின் கைப்பாவையாக இப்ராஹிம் செயல்படுகிறார் என்பது பிரான்ஸ் முன்வைக்கும் விமர்சனம். BURKINA FASO-ல் மேற்கத்திய ஊடகங்களின் ஒளிபரப்புக்குத் தடை விதித்துள்ள இப்ராஹிம், CFA நாணயத்துக்கு  மாற்றாக ஆப்ரிக்க நாடுகளுக்கென்று தனி நாணயத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

IBRAHIM TRAORE சர்வாதிகாரியா? அல்லது நல்ல தலைவரா? என்று கேட்டால் பதில் சொல்வது கடினம். ஆப்ரிக்காவை ஒன்றிணைக்கக்கூடிய சக்தி அவருக்கு இருப்பதால்தான் இப்ராஹிமை கொல்ல மேற்கத்திய நாடுகள் முயல்வதாகக் கூறப்படுகிறது. எனினும் சுய பிம்பத்தை கட்டமைப்பதைவிட ஆப்ரிக்காவின் உண்மையான சுதந்திரத்தை மீட்டெடுப்பதில் இப்ராஹிம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

Tags: ஆப்பிரிக்காAfrica's 'new hope'?ஆப்பிரிக்காவின் ‘புதிய நம்பிக்கை’?BURKINA FASO நாட்டின் அதிபர் இப்ராஹிம்
ShareTweetSendShare
Previous Post

புவிசார் அரசியலில் மாற்றம் : மத்திய கிழக்கில் புது உலகம் – தனிமைப்படுத்தப்பட்ட ஈரான்!

Next Post

இன்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்!

Related News

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

வெளியான புதிய ஆதாரம் : பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அமெரிக்கா : பயணிகள் விமானம் மீது மோதி விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்!

பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு – அமெரிக்கா

அமெரிக்கா : துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி – குற்றவாளி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

காட்டு யானை தாக்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம்!

கரூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஆசிய குத்துச்சண்டை – தங்கப்பதக்கம் வென்ற இந்தியா!

நிபந்தனையுடன் தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

இந்திய பொருளாதாரம் உலகில் வேகமாக முன்னேறி வருகிறது : முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

கவர்ச்சியான வேடங்களுக்காகவே நடிக்க வைக்கிறார்கள் – பூஜா ஹெக்டே

ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

200 தொகுதிகளில் திமுக தோற்கும் : நயினார் நாகேந்திரன்

புதிய சாதனையை படைத்தது ஓலா நிறுவனம்!

மினிமம் பேலன்ஸை தீர்மானிப்பது வங்கிகள் தான் – RBI

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies