திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
பெரியபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற வேன், பெரிய பாளையம் கோயில் அருகே நின்றது.
அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது பயங்கரமாக மோதி தீப்பிடித்து எரிந்தது.
இதனால் வேனில் இருந்து மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு வேனில் இருந்து இறங்கினர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.