பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் விளைவுகளை சந்திக்க வேண்டும் - ராஜ்நாத் சிங் உறுதி!
Nov 16, 2025, 01:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் விளைவுகளை சந்திக்க வேண்டும் – ராஜ்நாத் சிங் உறுதி!

Web Desk by Web Desk
Jun 26, 2025, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாத செயலை நியாயப்படுத்த முடியாது என்றும், பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. குவிங்டாவ் நகரில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டோங் ஜுன் வரவேற்றார்.

இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பங்கேற்ற 12 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

பின்னர் மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.

சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை உருவாக்குவதன் மூலம் நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க முடியும் என்பதை இந்தியா நம்புகிறது என கூறினார். அமைதி, பாதுகாப்பு போன்ற சவால்களை உலக நாடுகள் சந்தித்து வருவதாக கூறிய அவர், இந்த பிரச்னைகளுக்கு மூல காரணம் அதிகரித்து வரும் பயங்கரவாதம் என தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றும், இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை எனவும் பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தார். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக உள்ள நாடுகளை விமர்சிக்க தயங்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய தக்க பதிலடி கொடுத்ததாக குறிப்பிட்ட அவர், எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு காரணமானவர்கள் நீதியின் முன்நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இந்தியா ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய பிராந்திய மேம்பாட்டு கூட்டாளி என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Tags: minister rajnath singhDefense Ministers' ConferenceShanghai Cooperation Organizationscohinese Defense Minister Admiral Dong
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் 2025 – நீரஜ் சோப்ரா சாம்பியன்!

Next Post

தஞ்சாவூர் : சங்ககால ஈமத்தாழிகள் கண்டெடுப்பு!

Related News

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies