POCO நிறுவனம் தனது F 7 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது புதிய அப்டேட்டுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் இந்த புதிய F7 5G ஸ்மார்ட்போன் 3 வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு வேரியன்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த போனின் ஆரம்ப விலை 31 ஆயிரத்து 999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 1-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.