சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நள்ளிரவில் வீட்டின் கேட்டை உடைத்து இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த முருகன் தனது மனைவி பெயரில் தனியார் வங்கியில் கடன் பெற்று இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார். தொடர்ந்து மாத தவணை செலுத்தவில்லை எனக்கூறி தனியார் வங்கி ஊழியர்கள் அத்துமீறி அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவம் குறித்து புகார் அளித்தும் போலீசார் அதற்கு செவிசாய்க்காமல், தங்களை மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
















