விவோ நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனது X FOLD 5 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
இந்தப் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 8.03 இன்ச் உள்புற பேனலைக் கொண்டுள்ளது.
இரண்டு டிஸ்ப்ளேக்களும் 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளவையாக அமைக்கப்பட்டுள்ளது.
50 MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50 MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா மற்றும் 20 MP செல்ஃபி கேமரா சென்சாரும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
5 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்தப் போனின் அதிகபட்ச விலை 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.