புரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
மேலும், ஒருவருக்கொருவர் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைதொடர்ந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
















