சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிந்த விவகாரம் - 6 காவலர்கள் பணியிடை நீக்கம்!
Sep 29, 2025, 08:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிந்த விவகாரம் – 6 காவலர்கள் பணியிடை நீக்கம்!

Web Desk by Web Desk
Jun 29, 2025, 09:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திர காளியம்மன் கோயிலில் அஜித்குமார் என்பவர் தற்காலிகமாக பணிபுரிந்து வந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த மருத்துவர் நிக்கி என்பவர் தனது தாயுடன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது அவர், அஜித்குமாரிடம் கார் சாவியை கொடுத்து பார்கிங்கில் காரை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

பின்னர், சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது காரில் இருந்த 10 சவரன் நகைகள் மாயமானதாக தெரிகிறது. இது குறித்து நிக்கி அளித்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீசார் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த அவர், காவல் நிலையத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், காவல் நிலையத்தில் னது சகோதரரை போலீசார் கடுமையாக தாக்கியதாக வேதனை தெரிவித்தார். காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லும்போதே வாகனத்தில் வைத்து 5க்கும் மேற்பட்ட காவலர்கள் தனது சகோதரரை தாக்கியதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், தன்னையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியதாகவும் கூறினார்.

இந்த விவகாரத்தில், 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட எஸ்பி ஆஷித் ரவத் உத்தரவிட்டுள்ளார். மேலும், வெளிப்படையான விசாரணை நடத்தவும் எஸ்பி ஆணையிட்டுள்ளார்.

Tags: Madhapuram Pathira Kaliamman Temple iAjith kumarsivagangaSix policemen suspendedyouth dead in police station
ShareTweetSendShare
Previous Post

2036 இந்தியாவில் ஒலிம்பிக் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு?

Next Post

2026 சட்டமன்ற தேர்தல் – மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் மேலும் சில தளர்வை அறிவித்த திமுக அரசு!

Related News

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

Load More

அண்மைச் செய்திகள்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமனம்!

சத்தீஸ்கர் : சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு – பாதுகாப்புப் படையினர்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

பெரு நாட்டிலும் அரசுக்கு எதிராக ஜென் ‘Z’ தலைமுறையினர் போராட்டம்!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

தெலுங்கானாவில் மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரத்து – பி.ஆர்.எஸ் கட்சியினர் போராட்டம்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies