மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை 44-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் காரணமாக, மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 58 ஆயிரம் கன அடி தண்ணீர் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது.
உபரி நீர் வெளியேறுவதை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி, அணை பொறியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
















