நடிகை கீர்த்தி பாண்டியன் நடித்த அஃகேனம் திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் காட்சிகள் வெளியீட்டு விழா நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் அருண்பாண்டியன், இயக்குனர் உதயகுமார் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.
இந்த படத்தில் நடிகை கீர்த்தி பாண்டியன் கால் டாக்சி ஓட்டுநராக நடித்துள்ளார். நிகழ்ச்சிக்குப் பின்னர் பேட்டியளித்த அவர், அஃகேனம் திரைப்படம் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் பெண் கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.