திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பலியான இளைஞர், தப்பியோட முயன்றபோது வலிப்பு வந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கிராமத்தில் நகை திருட்டு சம்பவத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
உடற்கூராயில் அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வலிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போலீசாரிடமிருந்து தப்பிக்க அஜித்குமார் முயற்சித்ததாகவும், அப்போது கீழே விழுந்ததில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், இதனாலேயே அஜித்குமார் உயிரிழந்ததாகவும் எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதனை ஏற்க உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். போலீசார் தாக்கியதற்கான ஆதராம் உள்ளதாகவும், திட்டமிட்டு உண்மையை மறைக்க போலீசார் முயற்சிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.