திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு தொடர்பாக ஆய்வு செய்த நீதிபதியை உறவினர்கள், பொதுமக்கள் வழிமறித்து முறையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கிராமத்தில் நகை திருட்டு சம்பவத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
காவலாளி அஜித்கமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில், நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் நேற்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.
விசாரனை முடிந்து வெளியே வரும்போது காரை வழிமறித்த அப்பகுதி பெண்கள், தங்கள் கண்முன்னே அஜித்குமாரை போலீசார் அடித்து துன்புறுத்தியது குறித்து நீதிபதி முன் எடுத்துரைக்க முயன்றனர்.
ஆனால் போலீசார் அவர்களை தடுத்து, அங்கிருந்து நீதிபதியின் காரை வெளியே அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.