புதுச்சேரி மாநில பாஜக தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. ராமலிங்கம் பதவியேற்றுக் கொண்டார்.
புதுச்சேரியில் பாஜக தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. ராமலிங்கத்தை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் மாநில பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், புதிய தலைவராக அவர் பொறுப்பேற்கும் விழா புதுச்சேரி நூறடி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் முன்னிலையில் பாஜக மாநிலத் தலைவராக வி.பி.ராமலிங்கம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார், வரும் சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் பாஜக 15 இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெறும் என தெரிவித்தார்.