திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவையொட்டி யாகசாலை பூஜைக்காகக் கடலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கோயில் ராஜகோபுரம் கீழ்ப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலில் இன்று மாலை 5 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை தொடங்குகிறது.
யாகசாலை பூஜைக்காகத் திருச்செந்தூர் கடலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு அதிகாலை விமரிசையாக நடைபெற்றது.
மேள தாளங்கள் முழங்க கடலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு சண்முக விலாச மண்டபத்தில் வைத்து சங்கல்பம் செய்யப்பட்டது.
கோ பூஜை, கஜ பூஜையைத் தொடர்ந்து கிரி பிரகாரம் சுற்றி யாகசாலை மண்டபத்திற்குத் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.