தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொழில்களுக்கு எவ்வளவு வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.
குடிசை மற்றும் சிறு தொழில்களைப் பொறுத்தவரை 500 யூனிட்களுக்கு மேல் உபயோகித்தால் 6 ரூபாய் 95 காசுகளாக இருந்த மின் கட்டணம், 7 ரூபாய் 15 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதுபோல, விசைத்தறி தொழிலுக்கு 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் 8 ரூபாயாக இருந்த கட்டணம், 8 ரூபாய் 25 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
தாழ்வழுத்த தொழிற்சாலைகள், ஐ.டி. நிறுவனங்களில் 112 யூனிட் மின்சாரத்திற்கு 8 ரூபாயாக இருந்த மின் கட்டணம் 8 ரூபாய் 25 காசுகளாக உயர்ந்துள்ளது.
பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்களைப் பொறுத்தவரை 3 புள்ளி 16 சதவீதத்திற்கு மிகாமல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.