விசாரணையின்போது காவல்துறையினர் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு அவருடைய தாயாரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கோரினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருட்டு வழக்கு விசாரணையின்போது காவலர்கள் சரமாரியாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த நிலையில், அஜித் குமாரின் தாயார், சகோதரரை சந்தித்து அமைச்சர் பெரிய கருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது அரசின் நிவாரணங்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து, அஜித் குமாரின் தாயார் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
அப்போது, அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரிய முதலமைச்சர் ஸ்டாலின், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.