சென்னையில் திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் திமுக சார்பில் நடந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவதூறாக பேசினார். இதனை கண்டித்து, சென்னை சிவானந்தா சாலையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கலந்து கொண்ட பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை காவல்துறையினர் அத்துமீறி வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தென் சென்னை பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு, ஆ.ராசாவை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார். பின்னர், பேட்டியளித்த அவர் திமுக அரசின் அடக்குமுறைக்கு எதிராக பாஜக தொடர்ந்து போராடும் என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகளை காவல்துறையினர் அத்துமீறி வலுக்கட்டாயமாக கைது செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.