பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அரசாங்கமாக திமுக அரசு உள்ளது என இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற முன்னாள் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையன் நினைவு தின சிறப்பு பூஜையில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் கலந்துகொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாடு பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும், நக்சலைட்டுகளுக்கும் புகலிடமாக இருந்து வருவதாக தெரிவித்தார்.
80 சதவீதம் உள்ள இந்துக்களை மதிக்காமல் அரசு செயல்படுவதே இதற்கு முக்கிய காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
















