திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 20 லட்சம் ரூபாய், ஆயிரத்து 30 கிராம் தங்கம் மற்றும் 15 கிலோ 405 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கோயிலின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வசந்த மண்டபத்தில் நடைபெற்றது. சுமார் 8 மணிநேரம் நீடித்த உண்டியல் எண்ணும் பணியின் முடிவில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.