மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு தங்கள் பணிகளை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அரசாணையின்படி ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
2-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தின்போது தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. தொடர்ந்து அவர்களை போலீசார் தடுக்க முயன்றதால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.