பொன்னேரி அருகே திருமணமான 4 நாட்களில் வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பம் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரி என்பவருக்கும், காட்டாவூர் பகுதியைச் சேர்ந்த பன்னீர் என்பவருக்கும் கடந்த 27ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. மணமகன் வீட்டார் வரதட்சணை கேட்டு லோகேஸ்வரியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த அவர், தனது தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்ணின் கணவர் பன்னீர் மற்றும் மாமியார் பூங்கோதை ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய பெண்ணின் மாமனார் ஏழுமலை மற்றும் நாத்தனார் நதியா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.