ஹரியானாவில் பெய்த கனமழையால் சர்க்கரை ஆலைக்குள் வெள்ள நீர் புகுந்து 50 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய சர்க்கரை ஆலையான சரஸ்வதி சர்க்கரை ஆலை ஹரியானாவின் யமுனாகரில் அமைந்துள்ளது.
அங்குப் பெய்த கனமழை காரணமாகச் சர்க்கரை ஆலைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் 50 முதல் 60 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது