பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட முதியவரைத் துரிதமாகச் செயல்பட்டு மயிலாடுதுறை போலீசார் மீட்டனர்.
மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் மேலஆராயத்தெருவில் வசிக்கும் மணிகண்டன், சிதம்பரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரிடம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
3 மாதங்களுக்கு முன்பு பழனிச்சாமிக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது மருத்துவச் செலவுக்காக மணிகண்டனிடம் வழங்கிய கடன் தொகையில் 10 லட்சம் ரூபாயைத் திரும்பப் பெற்றுள்ளார்.
ஆனால் மீதித் தொகையை வழங்க அவகாசம் கேட்ட நிலையில், அதனை ஏற்காத பழனிச்சாமியின் உறவினர்கள் மணிகண்டனின் தந்தை நடராஜனைக் கடத்திச் சென்றனர்.
இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில் கடத்தப்பட்ட நடராஜனை மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட 70 வயது முதியவர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.