கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் தனியார் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் மேற்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.
உளுந்தூர்பேட்டையில் இருந்து திருக்கோவிலூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள் சென்றுள்ளனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் பேருந்தினுள் ஏற இடம் கிடைக்காமல் சில மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் ஏறி அமர்ந்து பயணித்தனர்.