காசாவில் 60 நாள் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், 60 நாள் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த தகவலைத் தனது சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.