பல்லடம் அருகே ரீல்ஸ் போடுவது தொடர்பான தகராறில் 2 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் தாக்கிக் கொள்ளும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளும், கணபதிபாளையம் பகுதி அரசு பள்ளி மாணவிகளும் இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக ரீல்ஸ் பதிவிட்டு வந்துள்ளனர்.
இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஜெய்வாபாய் அரசுப் பள்ளி மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் கணபதிபாளையம் பகுதி மாணவிகள் இருவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.