திருப்புவனத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.
அஜித்குமாரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன் உள்ளிட்டோர் அரசுப் பணிக்கான ஆணை கடிதத்தையும், இலவச வீட்டுமனை பட்டாவையும் வழங்கினர்.
இதனைப் பெற்றுக்கொண்ட அஜித்குமாரின் குடும்பத்தினர் வழக்கில் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.